சீன ஊடகக் குழுமத்தின் CGTN இணையத்தில் சீன சின்ஜியாங்கில் பயங்கரவாத எதிர்ப்பு நினைவு என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.
சின்ஜியாங்கில் பயங்கரவாதிகள் புரிந்த குற்றங்களும் ஏராளமான உண்மைகளும் வெளியாகின. அமெரிக்க அரசியல்வாதிகள் சின்ஜியாங் குறித்து சொல்லிய போர்களை இந்த ஆவணப்படம் அம்பலப்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகள் செய்த குற்றங்களை எந்தவொரு பொறுப்புள்ள அரசும் புறக்கணிக்காது.
அதிதீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் அதன் ஊற்றிலிருந்து தடுக்கும் வகையில், சின்ஜியாங்கின் உள்ளூர் அரசு, கடந்த சில ஆண்டுகளில் தொழில் திறன் கல்வி மற்றும் பயிற்சி மையத்தைச் சட்டப்படி கட்டியமைத்து வருகின்றது.
கல்வியின் மூலம் பலர் திறன்களைப் பெற்று சமூகத்துடன் இணைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில், சின்ஜியாங்கில் பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாண்டு, சீனாவின் பிற பிரதேசங்களுடன் இணைந்து, சின்ஜியாங்கும் ஒரே நேரத்தில் முழுமையான வறுமை ஒழிப்பு இலக்கை அடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.