முகப்பு
உலகம்

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம்

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப்பின் உடல் வில்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Updated On : 18 ஏப்ரல், 2021 at 12:09 PM
பகிர்:

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப்பின் உடல் வில்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி அவர் காலமானார். வின்ஸ்டர் கேட்சில் அரசு மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 8 நாள்களுக்கு பிரிட்டனில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 17 ஆம் தேதி(சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு பிலிப் உடல் வின்சர் கோட்டையில் இருந்து தேவாலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கரோனா கட்டுப்பாடு காரணமாக இறுதி ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹாரி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.  பின்னர் இறுதிச்சடங்குகள் முடிந்து தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.