உலகம்

ஆப்கானிஸ்தான் : பாதுகாப்புப் படை தாக்குதலில் 439 தலிபான்கள் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து நடத்திய தாக்குதல்களில் 439 தலிபான்கள் பலியானார்கள் என்றும் 77 பேர் காயமடைந்தார்கள் எனவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்கனின் முக்கியப் பகுதிகளான நன்கர்கர், லெஹ்மன், லோகர், பக்ஷியா , உருஸ்கன், சாபுல் , கோர் , பரஹ் போன்ற பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலில் தலிபான்களைக் கொன்றதோடு சில இடங்களை ராணுவம் மீட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் , வன்முறைகளுக்கு இடையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மசர்-இ-ஷெரீப் நகருக்கு வந்தடைந்தார். வருகைக்கான காரணமாக தொடர்ந்து தலிபான்கள் ஆப்கன் பகுதிகளை கைப்பற்றி வருவதால் தாக்குதல்களுக்கிடையே குந்தூஸ் , லக்ஷர் , கந்தஹார் மற்றும் சில பகுதிகளைச்  சுற்றி இருக்கும் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியானதால் அதிபர் பேச்சுவார்த்தைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா உளவு நிறுவனம் ஒன்று , இன்னும் மூன்று மாதத்தில் தலிபான்கள் ஆப்கனின் தலை நகரான காபூலை கைப்பற்றிவிடுவார்கள் என்றும் அமெரிக்க படைகள் வெளியேறியதனால் தான் முன் எப்போதும் இல்லாத பின்னடைவை ஆப்கன் அரசு சந்தித்து வருகிறது என  தெரிவித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT