உலகம்

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளித்த எம்.ஐ.35  ஹெலிகாப்டரை கைப்பற்றிய தலிபான்கள்  

DIN

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் தலிபான்களின் ஆதிக்கமே அதிகரித்து வருகிறது. ஆப்கனின் 65% நிலப்பகுதிகளை கைப்பற்றிய  தலிபான்கள் தற்போது காபூலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் இன்னும் 90 நாட்களில் ஆப்கானிஸ்தான் முற்றிலும் தலிபான்களிடம் சரணடையும் என அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆப்கனின்  குந்துஸ் விமானப்படை தளத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கிருந்த எம்.ஐ ரக போர் ஹெலிகாப்டரையும் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.

பெலாரஸ் - ஆப்கானிஸ்தான் ஒப்பந்தத்தின் படி  2019-ம் ஆண்டு 4 எம்ஐ-35 ரக ஹெலிகாப்டர்களைப் பரிசாக இந்தியா வழங்கியது. அதன் பராமரிப்புச் செலவுகளை ஆப்கன் அரசே மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது  தலிபான்களிடம் சிக்கியிருக்கிறது.

நான்கு ஹெலிகாப்டரில் ஒன்று மட்டுமே தலிபான்கள் பிடியில் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

SCROLL FOR NEXT