பிரேசில் : இதுவரை கரோனாவால் 2.05 கோடி பேர் பாதிப்பு
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இரண்டாம் அலையின் தாக்கம் குறைவது போல் தெரிந்து தற்போது மீண்டும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால் கரோனா நோய்த் தொற்று மிகவேகமாக பரவி வருகிறது
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இரண்டாம் அலையின் தாக்கம் குறைவது போல் தெரிந்து தற்போது மீண்டும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால் கரோனா நோய்த் தொற்று மிகவேகமாக பரவி வருவதோடு அதிக இழப்புகளையும் சந்தித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,714 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் இதுவரை அந்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.05 கோடி எனவும் அதில் 5.75 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டில் கரோனாவிலிருந்து இதுவரை 1.9 கோடி பேர் குணமடைந்திருப்பதும் நேற்று ஒரே நாளில் 1,021 பேர் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது .