முகப்பு
உலகம்

தலிபான்களுடன் கைகோர்க்கிறதா சீனா?

ஆப்கானிஸ்தானில் அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான பங்கை சீனா ஆற்றியுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆப்கானிஸ்தானில் அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான பங்கை சீனா ஆற்றியுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிவந்துள்ளனர். இதன் காரணமாக, அமெரிக்கா கூட்டு ராணுவ படையினரும் மக்களும் நாட்டை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர். 

20 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் மீண்டும் பின்பற்றப்படுமா என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். தலிபான்களை அங்கீகரிக்க பிற நாடுகள் தயக்கம் காட்டிவருகிறது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான பங்கை சீனா ஆற்றியுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் சீன செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "சீனா ஒரு பெரிய நாடு. அதற்கு மிகப் பெரிய பொருளாதாரமும் திறனும் உள்ளது. ஆப்கானிஸ்தானை மீண்டும் சீரமைத்து கட்டியெழுப்புவதில் சீனா மிகப் பெரிய பங்காற்றலாம் என நினைக்கிறேன்" என்றார்.

முன்னதாக, சீன வெளியுறத்துறை அமைச்சர் வாங் யியை தலிபான் குழு கடந்த மாதம் துறைமக நகரமான தியான்ஜினில் சந்தித்து பேசியது. அதன் பின் பேசிய வாங் யி, ஆப்கானிஸ்தான் மிதவாத இஸ்லாமிய கொள்கையை பின்பற்றும் என நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.