உலகம்

நியூசிலாந்து : ஆகஸ்ட் - 24 வரை ஊரடங்கு நீட்டிப்பு

DIN

நியூசிலாந்தில் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் 3 நாள் பொதுமுடக்கத்தை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்திருந்த நிலையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து நாட்டில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கடந்த 6 மாதங்களாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நாட்டின் ஆக்லாந்து பகுதியில் வசித்துவந்த 58 வயதான நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக - 17) முதல் மூன்று நாள் ஊரடங்கை அறிவித்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதியில மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் வரும் ஆகஸ்ட்- 24 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

நான்காம் நிலை ஊரடங்கு என்பதால் பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் கடைகளும்  இயங்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT