கோப்புப்படம் 
உலகம்

ஆப்கன் விவகாரம்: சீனா, அமெரிக்கா பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்புபேற்றதையடுத்து முதல்முறையாக சீனா, அமெரிக்க நாடுகளுக்கிடையே ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

DIN

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்புபேற்றதையடுத்து முதல்முறையாக சீனா, அமெரிக்க நாடுகளுக்கிடையே ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்புபேற்றதையடுத்து நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு துணை இயக்குநர் ஹுவாங் எக்ஸ்யுஇபிங், அமெரிக்கா ராணுவ துணை இயக்குநர் மைக்கேல் சேஸுடன் கடந்த வாரம் காணொளி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து ஹாங் காங் செளத் சீனா மார்னிங் போஸ்ட் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "ஆப்கன் பிரச்னை உடனடியாக ஆலோசனைக்குட்படுத்த வேண்டிய விவகாரங்களில் ஒன்று. 

அலாஸ்கா பேச்சுவார்த்தையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இப்பிரச்னை குறித்து எழுப்பினார். ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இதுகுறித்து விவாதிக்க மறுத்துவிட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஜோ பைடன் அதிபராக பொறுபேற்றாக பிறகு, அலாஸ்காவில் மார்ச் மாதம் அமெரிக்கா, சீனா நாடுகளுக்கிடையே உயர் மட்ட அலுவலர்கள் ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

SCROLL FOR NEXT