முகப்பு
உலகம்

ஆப்கனிலிருந்து பறந்த கடைசி பிரிட்டிஷ் விமானம்!

​ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களைத் திரும்ப அழைக்கும் திட்டத்தின் கடைசி விமானம் காபூலிலிருந்து புறப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
கோப்புப்படம்
பகிர்:


ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களைத் திரும்ப அழைக்கும் திட்டத்தின் கடைசி விமானம் காபூலிலிருந்து புறப்பட்டது.

இதுபற்றி ராய்டர்ஸ் செய்த நிறுவனம் தெரிவித்திருப்பது:

"ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றும் கடைசி பிரிட்டிஷ் விமானம் காபூலிலிருந்து புறப்பட்டது. ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, 2 வாரங்களில் 15,000 ஆப்கன் மக்கள் மற்றும் பிரிட்டிஷ் குடிமக்களைத் திரும்ப அழைத்த திட்டம் முடிவுக்கு வந்தது."

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, சர்வதேச நாடுகள் தங்களது மக்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தின. பிரிட்டனும் இந்தப் பணியைத் தீவிரப்படுத்தியது. 

முன்னதாக, பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ் அளித்த பேட்டியில், "ஆப்கனிலிருந்து மக்களை வெளியேற்றும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும், ஒரு சில மணி நேரங்களே மிச்சமுள்ளன" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.