முகப்பு
உலகம்

24 நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளது: உலக சுகாதார அமைப்பு

அதிவேகமாகப் பரவக் கூடியது என்று அஞ்சப்படும் ஒமைக்ரான் வகை கரோனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சவூதி அரேபியா, நைஜீரியா உள்ளிட்ட 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

அதிவேகமாகப் பரவக் கூடியது என்று அஞ்சப்படும் ஒமைக்ரான் வகை கரோனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சவூதி அரேபியா, நைஜீரியா உள்ளிட்ட 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் கலிஃபோா்னியாவை சோ்ந்த ஒருவருக்கும், வடக்கு ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து வந்த ஒருவருக்கு சவூதி அரேபியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த இருவருக்கு நைஜீரியாவிலும் ஒமைக்ரான் வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒமைக்ரான் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 12 ஆக இருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி தொற்று பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 

ஒமைக்ரான் வகை கரோனா, ஏற்கெனவே பிரிட்டன், இத்தாலி, இஸ்ரேல், நெதா்லாந்து, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →