முகப்பு
உலகம்

நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 6 டிசம்பர், 2021 at 6:06 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வகை கரோனா பரவி வருகிறது.

இந்தியாவிலும் முதலாவதாக கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று கடந்த டிச. 3-ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் பாதிப்பு 21 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

இதன் தொடர்ச்சியாக அண்டை நாடான நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 66 வயதான நபர் ஒருவருக்கும் அவருடன் தொடர்பில் இருந்த 71 வயதுடைய ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இருவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். அந்நாட்டு சுகாதாரத் துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

ஒமைக்ரான் தொற்று பரவலை அடுத்து ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.