கோப்புப்படம் 
உலகம்

59 நாடுகளுக்கு பரவிய ஒமைக்ரான் கரோனா தொற்று

ஒமைக்ரான் வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.

DIN

ஒமைக்ரான் வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.

உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ஒமைக்ரான் கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒமைரான் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் நாட்டின் கரோனா தொற்று பரவல் சூழலை விளக்கினர்.

அப்போது உலகின் 59 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை  உலகம் முழுவதும் இதுவரை 2,936 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு பேசினார்.

சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரிட்டனில் அதிகபட்சமாக 817 பேரும், டென்மார்க்கில் 796 பேரும் தென்னாப்பிரிக்காவில் 431 பேரும் ஒமைக்ரான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT