முகப்பு
உலகம்

உலக அழகிப் போட்டி 2021 ஒத்திவைப்பு: காரணம் கரோனாவா?

கரோனா பரவல் அச்சம் காரணமாக, உலக அழகிப் போட்டி 2021 தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போட்டியை நடத்தும் குழு அறிவித்துள்ளது.

Updated On : 17 டிசம்பர், 2021 at 5:08 PM
உலக அழகிப் போட்டி 2021 ஒத்திவைப்பு: காரணம் கரோனாவா?
பகிர்:


கரோனா பரவல் அச்சம் காரணமாக, உலக அழகிப் போட்டி 2021 தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போட்டியை நடத்தும் குழு அறிவித்துள்ளது.

உலக அழகிப் போட்டி 2021ல் பங்கேற்றுள்ள இந்திய அழகி மானஸா வாராணசி உள்பட சில போட்டியாளர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்து.

போட்டியாளர்கள், ஊழியர்கள், நடுவர் குழுவினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உலக அழகிப் போட்டி 2021 தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் தீவுப் பகுதியான ப்யூர்ட்டோ ரிக்கோவில் வியாழக்கிழமை உலக அழகிப் போட்டி தொடங்கவிருந்த நிலையில், போட்டியாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.