உலகளவில் 48.6 % மக்களுக்கு 2 தவணை தடுப்பூசி 
உலகம்

உலகளவில் 48.6 % மக்களுக்கு 2 தவணை தடுப்பூசி

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 385 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

DIN

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 385 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்றைக் கட்டுப்படுத்து நோக்குடன் கொவாக்ஸின் , கோவிஷீல்ட் , ஸ்புட்னிக் , போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒமைக்ரான் தொற்று பரவலுக்குப் பின் தடுப்பூசிகள் செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டு தவணையாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இதுவரை 385 கோடி பேர் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 48.6 சதவீதம் என தினசரி கரோனா அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. 

மேலும் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 5.3 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 8.3 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.47 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.8 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் தற்போது வரை 909 கோடி  தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் தொற்று பரசி வரும் சூழலில் இந்தியாவில் இதுவரை 145.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT