முகப்பு
உலகம்

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஊரடங்கு நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவருகிறது. ஊரடங்கு திரும்பபெறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியாவின் 50 சதவிகித மக்கள் வீட்டிலேயே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரு நகரமான சிட்னி அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 110 பேருக்கு கரோனா ஏற்பட்டுள்ளது. டெல்டா வகை கரோனா பரவிவந்த நிலையில், நான்கு வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இரண்டு வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்த விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் முதலமைச்சர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "சில வாரங்களக்கு முன்பு ஊரடங்கு அமல்படுத்தவில்லை எனில் தற்போது 110 ஆக இருக்கும் கரோனா எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்திருக்கும். ஆனால், நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.

பெருந்தொற்று பரவ தொடங்கி 18 மாதங்கள் கடந்த நிலையில், 1 கோடியே 30 லட்சம் ஆஸ்திரேலியர்கள் கடும் ஊரடங்கில் இருந்துவருகின்றனர். இதுவரை, 11 சதவிகித்தினருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →