உலகம்

ஈரானுக்கு 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கும் இந்தியா

DIN

ஈரான் நாட்டிற்கு 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஈரான் நாட்டிற்கு மத்திய அரசின் சார்பில் மொத்தம் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 1.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஈரானுக்கு வழங்கப்பட்ட நிலையில் எஞ்சிய 3.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரம் ஈரானை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT