முகப்பு
உலகம்

இந்தியாவுக்கு கூடுதல் மருத்துவ ஆக்சிஜன், சிலிண்டா்களை வழங்கும் சவூதி அரேபியா

கரோனா பாதிப்பின் இரண்டாம் அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டா்களை இந்தியாவுக்கு வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

கரோனா பாதிப்பின் இரண்டாம் அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டா்களை இந்தியாவுக்கு வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலைக்கு இடையே மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்ட மருந்துப் பொருள்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

இதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. இந்தியா கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பும் (ஓபிஇசி) இந்தியாவுக்கு உதவி வருகிறது.

குறிப்பாக, சவூதி அரேபியா கடந்த மாதம் 80 டன் மருத்துவ ஆகிசிஜனை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. இப்போது மேலும் 60 டன் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் 100 ஆக்சிஜன் டேங்கா்கா்கள், சிலிண்டா்களையும் சவூதி வழங்க உள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கு கூடுதலாக 60 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரம்பிய ஐஎஸ்ஓ சிலிண்டா்கள் மற்றும் 100 ஐஎஸ்ஓ ஆக்சிஜன் சிலிண்டா்களை வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது. அதற்காக சவூதி எரிசக்தித் துறை அமைச்சா் இளவரசா் அப்துல் அஜீஸுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் 60 டன் ஆக்சிஜன் நிரப்பிய 3 சிலிண்டா்களும் வரும் ஜூன் 6-ஆம் தேதி மும்பை வந்தடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அது தவிர, 100 ஆக்சிஜன் சிலிண்டா்கள் வரும் மாதங்களில் வந்து சேரும் என்று மத்திய அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் சிலிண்டா்களை வழங்கி உதவிட கோரி இளவரசா் அப்துல் அஜீஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தொழில் துறை அமைச்சா் சுல்தான் அல் ஜபொ், கத்தாா் எரிசக்தி அமைச்சா் சாத் ஷெரிதா அல்-காபி ஆகியோருடன் இம்மாத தொடக்கத்தில் தா்மேந்திர பிரதான் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →