அமெரிக்கா: கரோனாவால் ஒரே நாளில் 2,100 பேர் பலி
அமெரிக்காவில் கரோனாவால் ஒரே நாளில் 2,100 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவில் கரோனாவால் ஒரே நாளில் 2,100 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
உலகளவில் கரோனாவால் பெரிய பாதிப்பை சந்தித்து வரும் அமெரிக்காவில் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று நிலவரப்படி(செப்-30) கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றின் காரணமாக 2,100 பலியானதைத் தொடர்ந்து இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 6.98 லட்சமாக உயர்ந்திருக்கிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4.45 கோடியாக பதிவாகியிருக்கிறது.
அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிரான குரல்கள் ஒலித்து வந்தாலும் இதுவரை 39.14 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன . இவற்றில் இரண்டு தவணை தடுப்பூசியை 14.6 கோடி பேர் எடுத்துக் கொண்டனர்.