உலகம்

உலகம் முழுவதும் 653 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

DIN

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 653 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க இதுவரை  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23.9 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின்பும் இதன் தீவிரம் குறையவில்லை.

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.45 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.12 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.4 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.5 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று(அக்-13) நிலவரப்படி 653 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாக தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் (புதன்கிழமை) நிலவரப்படி இந்தியாவில் 35,66,753 பேருக்கு தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :

சீனா - 222.9 கோடி

இந்தியா - 96.82 கோடி

ஐரோப்பா ஒன்றியம் - 69 கோடி

அமெரிக்கா - 48.6 கோடி 

பிரேசில் - 24.07 கோடி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT