உலகம்

உலகம் முழுவதும் 688 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

DIN

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 688 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க இதுவரை  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24.45 கோடியாக உயர்ந்துள்ளது. 

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.56 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.40 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.4 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.5 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று(அக்-26) நிலவரப்படி 688 கோடி கரோனா தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 292 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள் என்றும் தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 55.40 லட்சம் பேருக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர் . 

அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :

சீனா - 224.9 கோடி

இந்தியா - 103.19 கோடி

ஐரோப்பா ஒன்றியம் - 69 கோடி

அமெரிக்கா - 48.6 கோடி 

பிரேசில் - 24.07 கோடி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT