ஈரான் : கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிப்பு
ஈரானில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஈரானில் இதுவரை 50.03 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .
இதையும் படிக்க | கர்நாடகம் : 86 மாணவிகளுக்கு கரோனா தொற்று
நேற்று (செப்-2) நிலவரப்படி புதிதாக 32,696 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 50.03 லட்சமாக உயர்ந்திருக்கிறது. மேலும் இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,00,824 ஆகவும் பதிவாகியிருக்கிறது.
மேலும் ஈரானில் 2.27 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் 84 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள் எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.