ஆப்கானிஸ்தானுடனான எல்லையை மூடியது பாகிஸ்தான் 
உலகம்

ஆப்கானிஸ்தானுடனான எல்லையை மூடியது பாகிஸ்தான்

பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான் உடனான சாமன் எல்லைப் பகுதியை தற்காலிகமாக பாகிஸ்தான் மூடியுள்ளது.

DIN

பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான் உடனான சாமன் எல்லைப் பகுதியை தற்காலிகமாக பாகிஸ்தான் மூடியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தானின் சாமன் எல்லைப் பகுதி வழியாக ஆப்கன் மக்கள் பாகிஸ்தான்இல் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கன் உடனான எல்லையை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித், “ஆப்கானிஸ்தானில் அமைதியும், ஸ்திரத் தன்மையும் நிலவ பாகிஸ்தான் விரும்புகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக ஆப்கன் உடனான சாமன் எல்லைப் பகுதி கம்பிவேலிகளால் மூடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக பல்வேறு குழப்பமான கருத்துகள் நிலவிவருவதை மறுத்த அவர் பாகிஸ்தானில் அமெரிக்கர்கள் யாரும் இல்லை என விளக்கமளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT