அமெரிக்கா : கரோனாவால் 4 கோடி பேர் பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் இதுவரை 4 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் . இதன் மூலம் உலகில் அதிகம் தொற்று பாதித்த நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.
இதையும் படிக்க | நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல் காந்தி
நேற்று (செப்-6) நிலவரப்படி புதிதாக 60,000 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 4.03 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 6,48,935 ஆகவும் பதிவாகியிருக்கிறது.
மேலும் அமெரிக்காவின் கலிபோர்னியா-44.21 லட்சம் , டெக்சாஸ் - 37.06 லட்சம் , புளோரிடா - 33.52 லட்சம் மற்றும் நியூயார்க் - 23.04 லட்சமாகவும் அதிகம் தொற்று பாதித்த மாகணங்களாக பதிவாகியிருக்கிறது.