ஆப்கன் உடனான விமான சேவை: பாகிஸ்தான் அறிவிப்பு 
உலகம்

ஆப்கன் உடனான விமான சேவை: பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளதாக பாகிஸ்தான்  அறிவித்துள்ளது.

DIN

பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளதாக பாகிஸ்தான்  அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு அந்நாட்டில் உள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். 

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆப்கனில் இருந்து தப்பிப்பதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்ததைத் தொடர்ந்து விமான நிலையம் பராமரிக்கப்படாமல் சேதத்திற்குள்ளாகியது.

மேலும் தலிபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலுக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவையைத் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி முதல் தொடங்க உள்ள இந்த விமான சேவைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்து விட்டதாக பாகிஸ்தான் பன்னாட்டு விமானநிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஹபீஸ் கான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காபூல் விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் தலிபான்களுக்கு கத்தார் உதவி வருவதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT