உலகம்

இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்த கனடா

DIN

டெல்டா வகை உருமாறிய கரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கான தடையை செப்டம்பர் 26 வரை நீட்டித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன.

இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவைக்கான தடையை கனடா செப். 21-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. இந்நிலையில் கனடாவில் இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், அதனை செப்டம்பர் 26 வரை நீட்டித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும் பிற நாடுகளின் வழியாக கனடா வரும் இந்தியப் பயணிகள் கரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்டா வகை கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இந்திய விமானங்களுக்கு கனடா தடை விதித்த நிலையில், தற்போது 6வது முறையாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT