சீன அதிபர் ஜீ ஜின்பிங் 
உலகம்

‘அனல்மின் திட்டங்களுக்கு இனி நிதியுதவி இல்லை’: சீனா அறிவிப்பு

அனல்மின் நிலையத் திட்டங்களுக்கு இனி நிதியுதவி அளிக்கப் போவதில்லை என சீன அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார். 

DIN

அனல்மின் நிலையத் திட்டங்களுக்கு இனி நிதியுதவி அளிக்கப் போவதில்லை என சீன அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார். 

ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் பொது விவாதம் செவ்வாய்க்கிழமை (செப். 21) தொடங்கி செப். 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீன அதிபர் ஜீ ஜின்பிங், “வெளிநாடுகளின் அனல்மின் திட்டங்களுக்கு இனி நிதியுதவி செய்யப்போவதில்லை” என்கிற அறிவிப்பை வெளியிட்டார்.

மாறிவரும் பருவநிலையின் காரணமாக எழும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகவும் காலநிலை மாற்றத்தின் இலக்குகளை அடைய சீனா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் ஜீ ஜின்பிங் உறுதியளித்தார்.

காலநிலை மாற்றத்தின் சிக்கல்களைத் தீர்க்க புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஜீ ஜின்பிங் அறிவிப்புக்கு ஐக்கிய நாடுகளின் அவையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குடேரெஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

சீனாவானது இந்தோனேசியா, வியந்நாம், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அனல்மின் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி முதலீடு

SCROLL FOR NEXT