தாய்லாந்தில் வெள்ளம்: 6 பேர் பலி 
உலகம்

தாய்லாந்தில் வெள்ளம்: 6 பேர் பலி

தாய்லாந்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்புத் துறை அறிவித்துள்ளது.

DIN

தாய்லாந்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்புத் துறை அறிவித்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.  மேலும் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அசாதாரண சூழலை சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT