ஜெர்மனியில் இயங்கிய ரஷிய செய்தி சேனல்களை முடக்கியது யூடியூப் 
உலகம்

ஜெர்மனியில் இயங்கிய ரஷிய செய்தி சேனல்களை முடக்கியது யூடியூப்

கரோனா வைரஸ் மற்றும் பொதுமுடக்கம் குறித்த தவறான தகவல்களை வழங்கியதற்காக ஜெர்மனியில் இயங்கி வந்த ரஷியாவின் 2 செய்தி சேனல்களை யூடியூப் நிறுவனம் முடக்கியது.

DIN

கரோனா வைரஸ் மற்றும் பொதுமுடக்கம் குறித்த தவறான தகவல்களை வழங்கியதற்காக ஜெர்மனியில் இயங்கி வந்த ரஷியாவின் 2 செய்தி சேனல்களை யூடியூப் நிறுவனம் முடக்கியது.

யூடியூப் நிறுவனம் பல்வேறு நாடுகளில் அந்ததந்த நாடுகளின் விதிகளுக்கேற்ப இயங்கி வருகிறது. யூடியூப் தளத்தில் பல்வேறு செய்தி நிறுவனங்களும் தங்களது செய்தி சேனல்களை நடத்திவருகின்றன.

இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் இயங்கிவரும் ரஷியாவைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனமான ஆர்டிக்கு சொந்தமான இரண்டு யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை வழங்கியதற்காக இந்த சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் இது ரஷிய ஊடகத்தின் மீது நடத்தப்பட்ட போர் என கண்டித்துள்ளார். சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் மற்றும் யூடியூப் நிறுவனம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT