பாதுகாப்பு கருதி பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம்: தலிபான்
பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது என்று எங்களுடைய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும்வரை வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் தெரிவித்தார
பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது என்று எங்களுடைய படைகளுக்கு பயிற்சி அளிக்கும்வரை வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்தார்.
இதுகுறித்து தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் கூறியதாவது:
எங்களுடைய படைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது, பெண்களுடன் எப்படிப் பேசுவது என்று பயிற்சி அளிக்கப்படவில்லை. எனவே, பெண்கள் பாதுகாப்பு கருதி இந்த சூழ்நிலை மாறும்வரை வீட்டில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது தற்காலிகமான நடைமுறையே. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஜபிபுல்லா முஜாஹித் இவ்வாறு தெரிவித்தபின்னரே ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஒப்புக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், பெண்களுக்கு மதிப்பளிக்கிறோம் என்று உலகத்தை நம்ப வைப்பதற்காக தலிபான்கள் இவ்வாறு தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது, முகத்தை மறைக்கும்படி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான்கள் கூறுவதுடன், திருமணம் செய்துகொள்ள பெண்கள், சிறுமிகளை கடத்துவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதையும் படிக்க | தொடரும் தலிபான்களின் கொடூரம்: செய்தியாளர் மீது தாக்குதல்