உலகம்

விலைவாசி உயர்வால் போராட்டம்: பெருவில் ஊரடங்கு அறிவிப்பு

DIN

விலைவாசி உயர்வு காரணமாக பெருவில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் ஊரடங்கை அமல்படுத்துவதாக அந்நாட்டு குடியரசுத் தலைவர் பெட்ரோ காஸ்டில்லோ அறிவித்துள்ளார்.

பெருவில் கடந்த சில நாள்களாக எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தலைநகர் லிமாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அரசுக்கெதிரான போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பெரு குடியரசுத் தலைவர் பெட்ரோ காஸ்டில்லோ தலைநகரில் ஊரடங்கை இன்று அறிவித்தார்.

மேலும், போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதாகவும், இதுவரை 4 பேர் பலியாகியுள்ளதாகவும் பெரு அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலைவாய்ப்பு தகவல் வழங்கும் இணையதளத்திலேயே வேலையில்லையா?

கத்திரி வெயிலுக்கு இடையே காஞ்சிபுரத்தில் பலத்த மழை

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டனம்

டாப் 4-க்குள் நுழையுமா லக்னோ?

SCROLL FOR NEXT