உலகம்

உக்ரைனின் எரிபொருள் சேமிப்புத் தளத்தை அழித்த ரஷியப்படை!

கார்கீவ் பகுதியில் உக்ரைனின் எரிபொருள் சேமிப்புத் தளத்தை ரஷியப் படையினர் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

DIN

கார்கீவ் பகுதியில் உக்ரைனின் எரிபொருள் சேமிப்புத் தளத்தை ரஷியப் படையினர் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியாக ரஷியப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே உக்ரைன் மக்கள் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மேற்குலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து, இன்று கார்கீவ் பகுதியில் உக்ரைனின் எரிபொருள் சேமிப்புத் தளம் ரஷிய ஏவுகணைகளால் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் அதே பகுதியில் ஒரு ரயில் நிலையத்தில் உள்ள சில ராணுவ உபகரணங்களையும் வெளிநாட்டு ஆயுதங்களையும் ரஷியப்படையினர் அழித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக, ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகுஜன் சமாஜ் கட்சியைத் தடுக்க ரகசிய கூட்டணி: மாயாவதி குற்றச்சாட்டு!

மகளிர் உலகக் கோப்பை: கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

குன்றுகளை தகர்த்து, ஆறுகளை மடைமாற்றி... உருவாக்கப்பட்ட நவி மும்பை விமான நிலையம்!

இருமல் மருந்து: ம.பி.யில் குழந்தைகள் பலி 22 ஆக உயர்வு!

மக்களே உஷார்!! வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழால் ரூ. 97,000 மோசடி!

SCROLL FOR NEXT