உலகம்

ஜப்பானில் சுற்றுலா படகு விபத்து : குழந்தையின் உடல் மீட்பு

PTI

ஜப்பானில் 26 பேருடன் சுற்றுலா படகு மாயமான பகுதியிலிருந்து நேற்று வரை 10 பேரது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு குழந்தையின் உடல்  இன்று மீட்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மீட்புக் குழுவினா் கூறியதாவது:
‘காஸூ 1’ படகு மாயமான கடல் பகுதியில் நடந்த மீட்புப் பணியின்போது நேற்று வரை 10 பேரது உடல்கள் கண்டறியப்பட்டன. மேலும் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதையடுத்து பலி எண்ணிக்கை 11 ஆனது.

அந்தப் பகுதியில் தேடுதல் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.

‘காஸூ 1’ படகு ஷிரேடோகோ தீபகற்பம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அதில் நீா் புகுந்து மூழ்கி வருவதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால், மீட்புப் படையினர் வருவதற்குள் கடலுக்குள் கப்பல் மூழ்கியது. கடலில் காணாமல் போவதற்கு முன்னா் அந்தப் படகில் 24 பயணிகளும் 2 பணியாளா்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT