உலகம்

2 மணி நேரத்தில் 70 ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தினோம்: இஸ்ரேல் ராணுவம் 

இஸ்ரேல் எல்லையில் 2 மணி நேரத்தில் 70க்கு அதிகமான ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

DIN


இஸ்ரேல் எல்லையில் 2 மணி நேரத்தில் 70க்கு அதிகமான ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

காஜாவின் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் கமாண்டா் தைசீா்-அல்-ஜபரி என்பவரை சமீபத்தில் சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல் ராணுவம்.  இவரை தீவிரவாதி என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. அண்மையில், இஸ்லாமிக் ஜிஹாத்தைச் சோ்ந்த மற்றொரு தீவிரவாதி மேற்குக் கரையில் கைது செய்யப்பட்டதாகவும், அதனைத்தொடா்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தலுக்குப் பதிலடி தரும் விதமாக இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பினரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது. 

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

காஜாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட 70க்கு அதிகமான ராக்கெட்டுகளை  2 மணி நேரத்தில் சுட்டு வீழ்த்தினோம். அதில் 9 ரக்கெட்டுகளின் துண்டுகள் காஜாவின் எல்லைக்குள்ளேயே விழுந்தது. தீவிரவாதிகளின் ராக்கெட் அப்பாவி இஸ்ரேல் மற்றும் காஜாவின் பொதுமக்களை மிரட்டுவதாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT