முகப்பு
உலகம்

இம்ரான்கான் தனது ஆதரவாளர்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அவரது  ஆதரவாளர்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அவரது  ஆதரவாளர்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அரசு, நம்பிக்கையிலா திர்மானத்தில் தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக இருந்த ஷாபாஸ் புதிய பிரதமராக பதவியேற்றார். 

ஏஆர்ஒய் செய்து நிறுவனத்தின் கில் என்பவர் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தைப் பற்றி சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்ததால் ஆக. 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் காவல்துறையினரால் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கிறது. இதனால் போராட்டம் நடத்தவிருப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

சனிக்கிழமை எனது தலைமையில் பேரணி ஒன்று நடத்தப்படவிருக்கிறது. கில்லை ஆதரவித்து அவருக்கு நடக்கும் சித்ரவதைகளை எதிர்த்து இப்போராட்டம் நடத்தப்படும். இந்த அநியாயத்தை எதிர்த்து குரல்கொடுக்க உங்கள் எல்லோரையும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ள அழைக்கிறேன். 

முழு கட்டுரையைப் படிக்க →