கோப்புப்படம் 
உலகம்

கரோனா பரவல் அதிகரிப்பு: சீனப் பயணத்தைத் தவிர்க்க அமெரிக்கா அறிவுறுத்தல் 

கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் சூழலில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சொந்தநாட்டு மக்களை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. 

DIN

கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் சூழலில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சொந்தநாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் இந்த வாரத்தின் ஒரேநாளில் 3.7 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு சீனாவிற்கு பயணம் செல்லும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை தூதரக பணிகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சீனாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும், மக்கள் தங்களது பயணத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

சீனாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அமெரிக்கா நேரடியாக எந்தவித மருத்துவ உதவியையும் வழங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT