உலகம்

ஆப்கனில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தின் நஹ்ரின் மாவட்டத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

DIN

ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தின் நஹ்ரின் மாவட்டத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுவதாவது, 

இந்த சம்பவம் செனராக் நிலக்கரி சுரங்கத்தில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழை காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்ததாக செனாரக் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் பஷீர் அகமது கூறினார். 

நஹ்ரின் மாவட்ட ஆளுநர் குவாரி மஜித் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார் மற்றும் சுரங்கத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களைக் கண்டறிவதற்காகப் படைகள் அப்பகுதிக்கு அனுப்பபட்டுள்ளதாக கூறினார். 

சுரங்கத் தொழிலாளர்கள் இறப்பது இது முதல் முறையல்ல. நாட்டில் உள்ள பல்வேறு சுரங்கங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT