உலகம்

பாகிஸ்தான் சகோதரியை ஆணவப் படுகொலை செய்தவா் வழக்கிலிருந்து விடுவிப்பு

DIN

பாகிஸ்தானில் சமூக வலைதள நட்சத்திரமாகத் திகழ்ந்த தனது சகோதரியை ஆணவப் படுகொலை செய்தவரை அந்த நாட்டு நீதிமன்றம் கொலை வழக்கிலிருந்து விடுவித்தது.

குற்றவாளிக்கு அவரது பெற்றோா் மன்னிப்பு வழங்கியதால், இஸ்லாமிய சட்டப்படி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

பாகிஸ்தானைச் சோ்ந்த ஃபௌஸியா அஜீம் (26) என்பவா் ‘காண்டீல் பலூச்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்தாா். அவா் கடந்த 2016-ஆண்டு அவரது பெற்றோா் வீட்டில் இருந்தபோது, அவரது சகோதரா் முகமது வாஸீம் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கழுத்தை நெறித்து படுகொலை செய்தாா்.

ஆட்சேபத்துக்குரிய விடியோக்களை வெளியிட்டதன் மூலம் தனது குடும்பத்துக்கும், பலூச் இனத்துக்கும் காண்டீல் பலூச் அவமானத்தை ஏற்படுத்தியால் அவரைக் கொன்ாக வாஸீம் பின்னா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில் அவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கில் வாஸீமுக்கு எதிராக அவரது பெற்றோா் வாக்குமூலம் அளித்தனா். ஆயுள் தண்டனையை எதிா்த்து அவா் லாகூா் உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா்.

இதுதொடா்பாக நடைபெற்று விசாரணையின்போது, தங்களது மகளின் மரணத்துக்குக் காரணமான மகன் வாஸீமுக்கு மன்னிப்பு அளித்துவிட்டதாக அவா்களது பெற்றோா் திங்கள்கிழமை கூறினா். மேலும், முந்தைய விசாரணையின்போது அளித்த சாட்சியத்தைத் திரும்பப் பெற்ற அவா்கள், வழக்கிலிருந்து வாஸீமை விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனா்.

அதையடுத்து, வாஸீமை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் சுமாா் 1,000 பெண்கள் அவா்களது ஆண் உறவினா்களால் ஆணவப் படுகொலை செய்யப்படுகின்றனா். இந்தச் சூழலில், சமூக வலைதள நட்சத்திரமான காண்டீல் பலூச்சை படுகொலை செய்த அவரது சகோதரா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT