முகப்பு
உலகம்

உக்ரைன் அருகே தயாராக உள்ள ரஷிய ஜெட்டுகள்; செயற்கைக்கோள் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படங்கள்

பெலாரஸ், ​​கிரிமியா, மேற்கு ரஷியா போன்ற முக்கிய பகுதிகளில் ரஷிய படைகளின் நடமாட்டம் எந்தளவுக்கு உள்ளது என்பதையும் இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெளிவுப்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
செயற்கைக்கோள் புகைப்படங்கள்
பகிர்:

உக்ரைன் அருகே உள்ள எல்லை பகுதியில் ராணுவத்தை திரும்ப பெற்று வருவதாக ரஷியா கூறிவருகிறது. இந்நிலையில், அங்கு ரஷிய படைகாப்பு படை எந்தளவுக்கு ஆயத்தமாக உள்ளது என்பதை மாக்சர் செயற்கைக்கோள் நிறுவனம் உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள் மூலம் வெளிக்கொண்டுவந்துள்ளது. 

கடந்த சில நாள்களாக, ஐந்து இடங்களில் எடுக்கப்பட்ட உயர் தர புகைப்படங்களை அது வெளியிட்டுள்ளது. உக்ரைன் அருகே அந்நாட்டை தாக்குவதற்கான ராணுவ ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருப்பதை இந்த புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. மற்ற ராணுவ ஆயுதங்களும் இந்த பகுதிக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. 

எந்நேரத்திலும் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ், ​​கிரிமியா, மேற்கு ரஷியா போன்ற முக்கிய பகுதிகளில் ரஷிய படைகளின் நடமாட்டம் எந்தளவுக்கு உள்ளது என்பதையும் இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெளிவுப்படுத்தியுள்ளது.

ரஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என ரஷியா கூறியுள்ளது. இருப்பினும், உக்ரைன் ஒருபோதும் நேட்டோவில் சேராது என்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கத்திய நாடுகளின் கூட்டணி  படைகளை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என ரஷியா வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்த கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் ஏற்கவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு, உக்ரைன் கிரிமியா பகுதியில் ரஷியா படையெடுத்து ஆக்கிரமித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.