உலகம்

உலக கரோனா பாதிப்பு 42.38 கோடி: 34,88 கோடி பேர் மீண்டனர்

DIN

வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42.38 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 59.01லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் 223 நாடுகளில் கரோனா தொற்று பரவி அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சில நாள்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது உலக மக்களிடையே நம்பிக்கையை அளித்துள்ளது.  

இதுகுறித்து வேர்ல்டோ மீட்டர் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் உலக முழுவதும் 2,41,558 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 42,38,09,825-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 59,01,261 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 34,88,05,392 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 6,91,03,172 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 82,548 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 8,00,72,561    -ஆகவும், பலி எண்ணிக்‍கை 9,59,130 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,28,20,993 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,611,935 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,81,67,587-ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 6,43,938 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT