உலகம்

உக்ரைன் மீது இணையவழி தாக்குதல்

DIN

உக்ரைனின் வடக்கும் மற்றும் கிழக்கு பகுதிகளில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, உக்ரைன் மீது இணையவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றும்,  உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷியாவுக்கு இல்லை.

மேலும் உக்ரைன் ராணுவம் தனது ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ள புதின்,  ரஷிய நடவடிக்கைகளால் ஏராளமான உயிர்கள் பலி மற்றும் ரத்தக்களரிகளுக்கு உக்ரைன் ஆட்சியாளர்களே பொறுப்பு என்று புதின் கூறியுள்ளார். 

மேலும் ரஷிய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு நாட்டின் தலையிடும் "அவர்கள் பார்த்திராத விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரித்துள்ளார்.

புதின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை ரஷிய படைகள் நடத்திவரும் நிலையில், உக்ரைன் மீது சைபர் தாக்குதலையும் தொடுத்துள்ளது ரஷியா.

உக்ரைனைச் சேர்ந்த அரசு இணையதளங்களையும், உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்கள், உக்ரைன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கியுள்ளதுடன், உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்களின் தகவல்களை தகவல் அழிப்பு, டூல் மால்வேர் மூலம் அழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறது ரஷிய படைகள். உக்ரைன் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷியா விளக்கம் அளித்துள்ளது. 

இந்நிலையில், உக்ரைன்-ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும், அமைதியான தீர்வு வரும் என நம்புகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT