முகப்பு
உலகம்

‘ரஷியாவை தனிமைப்படுத்துங்கள்’: உலக நாடுகளுக்கு உக்ரைன் அமைச்சர் வேண்டுகோள்

உலக நாடுகள் ரஷியாவைத் தனிமைப்படுத்த முன்வர வேண்டும் என உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
‘ரஷியாவை தனிமைப்படுத்துங்கள்’: உலக நாடுகளுக்கு உக்ரைன் அமைச்சர் வேண்டுகோள்
பகிர்:

உலக நாடுகள் ரஷியாவைத் தனிமைப்படுத்த முன்வர வேண்டும் என உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது தரைப்படை, விமானப்படை, கப்பற்படை என மும்முனைத் தாக்குதலை ரஷியா மேற்கொண்டு வருகிறது. தலைநகர் கிவ்விற்குள் ரஷியப் படைகள் நுழைந்துள்ள நிலையில் உக்ரைன் படைகள் தொடர்ந்து போரிட்டு வருகின்றன. 

இந்நிலையில் கிவ் மாகாணத்தில் ரஷியப் படைகள் நடத்தி வரும் தாக்குதலால் சேதமடைந்த கட்டடங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது சுட்டுரைப் பதிவின் மூலம் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதில் அவர், “எங்கள் அழகான, அமைதியான நகரமான கிவ், ரஷிய தரைப்படை மற்றும் ஏவுகணைகளின் தாக்குதலில் மற்றொரு இரவைக் கழித்துள்ளது. அவர்களின் ஏவுகணைகளில் ஒன்று கிவ்வில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் மோதியது. ரஷ்ய கூட்டமைப்பை முற்றிலுமாக தனிமைப்படுத்த உலகை நான் கோருகிறேன். அவர்களின் தூதர்களை தங்களது நாடுகளிலிருந்து வெளியேற்றியும், அவர்களுடனான எண்ணெய்  வர்த்தகத்தை தடை செய்தும் உலக நாடுகள் ரஷியாவை தனிமைப்படுத்த முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தங்களுடைய ராணுவம் சரணடையவில்லை எனவும், தொடர்ந்து போரிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.