உலகம்

உலகளவில் 1,000 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

DIN

உலகம் முழுவதும் 1,000 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க இதுவரை  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37.43 கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தீவிரமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 

மேலும், ஒமைக்ரான் அச்சுறுத்துதல் காரணமாக வேகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக , ஒமைக்ரான் தொற்றால் அண்டை நாடுகள் தடுப்பூசிகளை தொடர்ந்து செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ,இன்று மாலை நிலவரப்படி உலகம்  முழுவதும் 1,000 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாவும் அதில் 425 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள் என்றும் தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்போது உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 7.43 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 8.84 லட்சம் பேர்  பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 4.1 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். 4.97 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகினர்.

மேலும், உலகம் முழுவதும் 53 சதவீத மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT