முகப்பு
உலகம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தப்பியோட்டம்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடியதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, மாளிகையை விட்டு தப்பியோடியதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபட்ச விலகியதை அடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச மாளிகையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் மற்றும் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பொதுமக்களில் சிலர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து போராட்டக்காரர்களின் முற்றுகை காரணமாக அதிபர் கோத்தப ராஜபட்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ந்து, மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மாளிகையை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →