உலகம்

இலங்கை: சிகிச்சை பெற முடியாமல் திணறும் நோயாளிகள்

இலங்கையில் மருந்துப் பொருள்களின் இருப்பும் குறைந்து வருவதால் அந்நாட்டில் பலரும் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

DIN

இலங்கையில் மருந்துப் பொருள்களின் இருப்பும் குறைந்து வருவதால் அந்நாட்டில் பலரும் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, எரிபொருள் பற்றாக்குறை, உணவுப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக பலரும் பணிக்குச் செல்வதை குறைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருள்களின் இருப்பும் குறைந்து வருவதால் சக்கரை மற்றும் எலும்பு முறிவு நோயாளிகள் பலரும் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொழும்பில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் பல வார்டுகள் இருட்டாக உள்ளன என்றும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் வலியுடன் அவதிப்படுவதாகவும் , மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வராத காரணத்தால் பலர் நோயுடனே வீட்டிற்குத் திரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

SCROLL FOR NEXT