உலகம்

கீவ்வில் உளவுத் துறை கட்டடம் அருகேவுள்ள மக்கள் வெளியேறுங்கள்: ரஷியா அறிவுறுத்தல்

DIN

கீவ் நகரின் உளவுத்துறை கட்டடத்திற்கு அருகே உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என ரஷிய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

ரஷிய அதிபர் புதின் உத்தரவை தொடர்ந்து கடந்த 6 நாள்களாக உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்தன. இதில், இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் பலியானார். மேலும், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், கீவ் நகரில் உள்ள உளவுத்துறையின் கட்டடத்தின் அருகே வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு ரஷியா அறிவுறுத்தியுள்ளது.

இந்த எச்சரிக்கை வெளியான நிலையில், இன்னும் சற்று நேரத்தில் உளவுத்துறையின் கட்டடம் மீது ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் அச்சம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளையை உண்ணும் அமீபா - சிறுமி மரணம்!

ஐபிஎல் எலிமினேட்டர்: ஆர்சிபியா? ராஜஸ்தான் ராயல்ஸா? ஓர் அலசல்!

வைகாசி மாதப் பலன்கள் - மகரம்

வைகாசி மாதப் பலன்கள் - தனுசு

உன் அழகில் கடலும் இசைபாடும்!

SCROLL FOR NEXT