கோப்புப்படம் 
உலகம்

கராச்சி: ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் கைது 

ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்  தலைவரும், முன்னாள் செனட்டருமான சவுத்ரி தன்வீர் கானை பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு  வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.

DIN

கராச்சி: ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்  தலைவரும், முன்னாள் செனட்டருமான சவுத்ரி தன்வீர் கானை பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு  வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானத்தில் ஏறி தன்வீர் கான் நாட்டை விட்டு தப்பி செல்ல முயற்சிப்பதாக, அதிகாரிகள் குற்றம் சாட்டியதின் பெயரில் கைது செய்யப்பட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த கைது நடந்துள்ளது.

பிரதமர் இம்ரான் கான், தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், எதிர்கட்சிகள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தொடர்ந்து கண்டனம்  தெரிவித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

பார்வையாளர்களைக் கவரும் பாண்டா!

களியக்காவிளை அருகே நகை திருட்டு வழக்கில் இளைஞா் கைது

புரட்டாசி கடைசி சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆயிரம் குழந்தைகளின் பெற்றோர்!

SCROLL FOR NEXT