உலகம்

அதிகரிக்கும் கரோனா: சீனாவில் டிஸ்னி பூங்கா மூடல்

DIN

சீனாவில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் உலகின் பிரபல பொழுதுபோக்குப் பூங்காவான டிஸ்னி லாண்ட் பூங்கா மூடப்பட்டது.

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளில் 45 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 60 லட்சம் பேர் தொற்றின் தீவிரத்தால் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த சில நாள்களுக்கு முன் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக  சீனாவின் 90 லட்சம் மக்கள் வசிக்கும்  வடகிழக்கு தொழில்துறை மையமான சாங்சுனில் அந்நாட்டு அரசு ஊரடங்கை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஷாங்காய் நகரிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்குள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான டிஸ்னி லாண்ட் பூங்காவை காலவரையின்றி மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கரோனா தொற்று உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT