கோப்புப் படம் 
உலகம்

கச்சா எண்ணெய் விலையை குறையுங்கள்: ரஷியாவுக்கு இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு வழங்கிவரும் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 70 டாலருக்கு கீழ் குறைக்க வேண்டும் என்று ரஷியாவுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN


இந்தியாவுக்கு வழங்கிவரும் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 70 டாலருக்கு கீழ் குறைக்க வேண்டும் என்று ரஷியாவுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து ரஷியாவிடமிருந்து தற்போதுவரை 40 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மத்திய அரசால் வாங்கப்படுகிறது. சமீபத்தில் மொத்தமாக 15 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷியா சலுகை விலையில் வழங்கியது.

இந்நிலையில், ரஷியா வழங்கிவரும் கச்சா எண்ணெயை 70 டாலருக்கு கீழ் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. தற்போது பேரல் கச்சா எண்ணெய் 105 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.  

ரஷியா மீது பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகளால் ரஷியாவின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை உயர்ந்து பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மத்திய படை பாதுகாப்பு!

எஸ்.பி. அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

தில்லியில் கட்டுப்பாடு அமலுக்குப் பிறகும் நீடிக்கும் காற்று மாசு!

தஞ்சையில் ஜன.5-இல் அமமுக பொதுக் குழு

ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

SCROLL FOR NEXT