உலகம்

மரியுபோலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் சரணடைந்தனர்: ரஷியா

DIN

மரியுபோல் நகரில் உக்ரைன் ராணுவத்தினர் சரணடைந்ததாக ரஷியா  தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் 3 மாதங்களை எட்டவுள்ள நிலையிலும் ரஷியாவுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. 

போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவியையும் அளித்து வருகின்றன. 

மேலும், ரஷியாவுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்ததுடன் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் ரஷியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் தாக்குதலில் காயமடைந்த உக்ரைன் ராணுவ வீரர்கள் 265 பேர் சரணடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையிலே இந்த போர் தொடங்கியது குறிப்பிடத் தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT