துப்பாக்கிச் சூட்டில் குழந்தையை இழந்த பெற்றோர். 
உலகம்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 18 குழந்தைகள் பலி

அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியாகியுள்ளனர்.

DIN

அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் செவ்வாய்க்கிழமை பலியாகியுள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே நகரின் ராப் தொடக்கப் பள்ளியில் நுழைந்த சால்வடார் ராமோஸ்(18) என்ற இளைஞர், தனது கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் 18 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளதாக டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக அந்த இளைஞர் சொந்த பாட்டியை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை நடத்திய எதிர்தாக்குதலில் சால்வடார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை மற்றும் பிற அரசு கட்டடங்களில் அமெரிக்கக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT